நீங்க போதும் இயேசப்பா

உங்க சமுகம் எனக்கப்பா

 

1.

எத்தனை இன்பமே உந்தன் சமுகமே

உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே  – நீங்க

 

2.

புதுபெலன் தருகிறீர் புது எண்ணெய் பொழிகிறீர்

கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் – நீங்க

 

3.

அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்

திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்   – நீங்க

 

4.

தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே

தேடியும்  கிடைக்காத ஒப்பற்ற செல்வமே      – நீங்க

 



ningka bothum iyechabba

ungka chamukam enakkabba

 

1.

ethdhanai inpame unthdhan chamukame

ullamum utalume umakkay eengkuthe  –  ningka

 

2.

buthubelan dharukirir buthu enney bozikirir

kanidharum marangkalay seziththongkas seykirir –  ningka

 

3.

abba um chanth nithiyil ebbo nan vanththu nirben

thirumukam kandu nan thirubthiyil muzkuven   –  ningka

 

4.

thenilum inimaiye theviddadha amudhame

thediyum  kidaikkadha obparra selvame      –  ningka